Saturday, November 9, 2013

As a Father I fear about todays Cinema Says Surya-Tamil Kisu Kisu

இன்றைய படங்களை பார்க்கையில் என்போன்ற பெற்றோருக்கு பயம் ஏற்படுகிறது - சூர்யா பேச்சு!!


சமீபகாலத்து தமிழ்ப்படங்களில் ஒரு ஹீரோ என்பவர், தன்னுடன் ஒரு காமெடியன் உள்பட சில நண்பர்களை கூட்டிக்கொண்டு திரிவது. பின்னர், ஒரு அழகான பெண்ணை சுற்றிசுற்றி வந்து சைட் அடிப்பது. அந்த பெண்ணை எப்படி காதலிப்பது என்பதை அந்த காமெடியன் மற்றும் நண்பர்களிடம் ஐடியா கேட்பது. அதையடுத்து அவளை நெருங்கி காதல் சொல்லும்போது அவள் காதலை ஏற்க மறுத்து விட்டால், டாஸ்மாக் சென்று தண்ணி அடித்துக்கொண்டிருப்பது, கானா பாட்டு பாடுவது. இதுபோலத்தான் படத்துக்குப்படம் கதை பண்ணுகிறார்கள். சீன் பண்ணுகிறார். மேலும், பெத்து வளர்த்த தந்தையே வாய்யா போய்யா என்று மரியாதை குறைவாக திட்டுவது. அந்த வகையில், குறைந்தபட்சம் 10 டாஸ்மாக் காட்சிகளாவது இல்லாத படங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் பல முன்னாள் நடிகர்-நடிகைகளின் ஆதங்கமாகவும் உள்ளது.

இதுபற்றி சூர்யா கூறுகையில், இது வருத்தப்பட வேண்டிய விசயம்தான். தமிழ் சினிமா டெக்னிக்கல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து கொண்டிருக்கும நிலையில், இதுபோன்ற கதைகள் அதிகமாக படமாகி வருவது, சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை வறட்சி ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. மேலும் இந்த சமுதாயத்தில்தான் நாளை என் மகளும் வாழப்போகிறாள் என்ற பயமும் சில சமயங்களில் ஏற்படுகிறது. அதேப்போல் இன்றைய படங்களைப்பார்க்கையில் பெரும்பாலான பெற்றோர்களுக்கும், என்போன்றே பயம் ஏற்பட்டிருப்பதையும் உணர முடிகிறது.

இப்படி தனது மனநிலையை வெளிப்படுத்தும் சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்களில் வித்தியாசமான கதைகள் என்றால், சில படங்கள் மட்டும்தான் தேறும். அதை விரல்விட்டு எண்ணி விட முடியும். அதனால் இந்த கதை வறட்சியை போக்க அனைவருமே முயற்சி எடுக்க வேண்டும் என்கிறார்.

Vijay Sethupathi lost Malayalam Remake film-Tamil Kisu Kisu

விஜயசேதுபதி தவற விட்ட மலையாள ரீமேக் படம்!

ஹீரோ என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் நின்று கொண்டிருக்கிறார்கள் பெருவாரியான கதாநாயகர்கள். ஆனால், அந்த பார்முலாவை உடைத்து விட்டு கதாநாயகன் என்பவன் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று ஒரு புதிய கொள்கையை வகுத்துக்காட்டியிருப்பவர் விஜயசேதுபதி. 

அவர் நடித்த பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களைப்பார்த்து விட்டு, இவர் பாணியில்கூட கதைகளை தேர்வு செய்து நடிக்கலாமா? என்று பலரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். அந்த அளவுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் விஜயசேதுபதி.

அப்படிப்பட்டவருக்கு மலையாளத்தில் வெளியான 22 பீமேல் கோட்டையம் என்ற படத்தை யாராவது தமிழில் ரீமேக் செய்தால் அதில் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் இப்போது அதன் ரீமேக்கான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தை ஸ்ரீப்ரியா புதுமுக நடிகரை வத்து இயக்கி முடித்து விட்டார்.

அந்த படம்தான் 22 பீமேல் கோட்டையம் படத்தின் ரீமேக் என்பதை அறிந்த விஜயசேதுபதி ஷாக் ஆகிவிட்டாராம். இந்த விசயம் முன்பே தெரிந்திருந்தால் ஸ்ரீப்ரியா மேடத்திடம் சான்ஸ் கேட்டு நடித்திருப்பேனே என்று இப்போது பீல் பண்ணுகிறார். இதைப்பார்த்து, ஹீரோயினி ஓரியண்ட் சப்ஜெக்டுகளில் பெரும்பாலான ஹீரோக்கள் நடிக்க தயங்கும் நிலையில், விஜயசேதுபதியே இந்த மாதிரியான கதைகளில் ஆர்வம் காட்டுவது சினிமா அபிமானிகளிடையே அவரது இமேஜை இன்னும் உயர்த்தியுள்ளது.

Sivakarthikeyan bought Audi car-Tamil Kisu Kisu

ஆறே படத்தில் ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன்


சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன் பிறகு 3 படத்தில் சிறிய காமெடி கேரக்டரில் நடித்தார். மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க மெரீனாவில் 2 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்போது 5 கோடி சம்பளம் வாங்குகிறார். தனது உயரத்தின் அடையாளமாக இப்போது 6 படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கி உள்ளார். அதில் உட்கார்ந்து போஸ் கொடுத்து அந்தப் படத்தை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.

சினிமாவின் சிகரங்களை தொட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் தனது பழைய அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார். 6 படங்களில் நடித்த சிவா ஆடி காரில் பவனி வரப்போகிறார். சினிமா காட்டும் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று.

I wont do plastic surgery for my face Lakshmi Menon-Tamil Kisu Kisu

முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண மாட்டேன்: லட்சுமி மேனன்


அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகை லட்சுமி மேனன், கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டு. பணமும் அவர் காட்டில் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இதனால் அவர் முகத்தில் இருக்கும் சிறிய தழும்பு ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறைக்க போகிறார் என்ற பேச்சு இருந்தது. அதனை மறுத்திருக்கிறார் லட்சுமி மேனன். 

"நான் அழகான பொண்ணு கிடையாது. பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கேன். அழகானவள்ங்கற திமிரும் கிடையாது, அழகு குறைவா இருக்கேங்கற தாழ்வு மனப்பான்மையும் கிடையாது. என் தோற்றத்துக்கு ஏற்ற கேரக்டர்களில் நடிக்கிறேன். அதில் முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன். அதுதான் வெற்றிகளுக்கு காரணம். சிலபேர் நான் வெயிட் போட்டுவிட்டதா சொல்றாங்க. அப்படியேதான் இருக்கேன். சேலை கட்டினா வெயிட் போட்ட மாதிரி தெரியும். மற்ற டிரஸ் போட்டால் வெயிட் குறைஞ்ச மாதிரி தெரியும்.

முகத்தில் உள்ள தழும்பை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணப்போறதா சொல்றாங்களாம். அப்படி ஒரு எண்ணம் முதல் இருந்திச்சு. இப்போ அந்த ஐடியாவை விட்டுட்டேன். அந்த தழும்பு அழகா எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன்னு எல்லோரும் சொல்றாங்க.

Comedy Actor Chitti Babu Passes Away-Tamil Kisu Kisu

காமெடி நடிகர் சிட்டி பாபு மரணம்!!


சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த, சிரிப்பு நடிகர் சிட்டிபாபு, சிகிச்சை பலனின்றி இறந்தார். "சிவகாசி, தூள், மாப்பிள்ளை உள்ளிட்ட, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், சிட்டிபாபு, 49. மூன்று ஆண்டுகளுக்கு முன், இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, இதய அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பின் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்; நீரிழிவு நோய் பாதிப்பும் இருந்தது. சென்னை, சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், இம்மாதம், 4ம் தேதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். 

சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில், உறவினர்கள் சேர்த்தனர். நீரிழிவு நோய் பாதிப்பால், மூளையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆபத்தான நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளதால், "கோமா நிலையை அடைந்தார். ஐ.சி.யூ.,வில் வைத்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை இறந்தார். அவருக்கு, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். சென்னை, நந்தனம் மயானத்தில், அவரது உடல், நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.

Wednesday, November 6, 2013

Is Asin Loves Dhoni-Tamil Kisu Kisu

தோணியுடன் காதலா? அசின் பரபரப்பு பேட்டி!


கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போய்விட்டு மீண்டும் கோலிவுட்டில் கோலோச்ச வந்திருக்கிறார் அசின். மும்பையில் இருந்தவரை அப்பாவுடன் சண்டை, தனி வீட்டில் குடித்தனம், பார்ட்டி கசமுசா என்று வதந்திகள் பல பரவி வந்தன. இப்போது புதிதாக அசினைச் சுற்றி வரும் கிசுகிசு தோணியுடன் காதல் என்பதுதான். சமீபத்தில் கேப்டன் தோணி, அசினின் வீட்டுக்கு சென்றதுதான் இந்த கிசுகிசுவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. இதுபற்றி அசினிடம் கேட்டால், தோணி பற்றிய கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஏன் நட்பை களங்கமாகப் பார்க்கிறார்கள். நானும் தோணியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தோம். அதில் ஏற்பட்டதுதான் இந்த நட்பு. அதை களங்கப்படுத்தாதீர்கள், என்றார். பாலிவுட் ஹீரோக்களுக்கு பார்ட்டி வைத்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் அதிகம் பார்ட்டிகளுக்குப் போவதில்லை. நண்பர்களுடன் வீட்டிலேயே பார்ட்டி வைப்பதுதான் பிடிக்கும். நான் மது அருந்த மாட்டேன். புகை பிடிக்க மாட்டேன். எனவே கிளப்களுக்குப் போய் பார்ட்டியைக் கொண்டாடுவதற்கான அவசியம் இல்லை. இருப்பினும் நண்பர்கள் அல்லது திரைத்துறையினர் தொடர்பான பார்ட்டி என்றால் கலந்து கொள்வேன், என்றார் அசின்.

பாலிவுட் பக்கம் போனபோது தமிழ் படங்களை நிராகரித்து விட்டு, இப்போது அங்கு வாய்ப்பு இல்லாததால் தமிழ் சினிமா பக்கம் திரும்பி வந்திருக்கும் அசினிடம் அதுபற்றி கேட்டால் ரொம்பவே டென்ஷன் ஆகிறார். நான் முதலில் தமிழை விட்டு போவதாக கூறவே இல்லை. எனவே திரும்பி வந்துள்ளேன் என்று கூற முடியாது. நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் நடிப்பேன் என்றுதான் கூறியிருந்தேன். எந்த ஒரு தனிப்பட்ட மொழி படங்களுக்கும் நான் சொந்தக்காரி அல்ல. எல்லா மொழிப் படங்களிலும் நான் நடிப்பேன். தமிழில் கஜினி மிகப் பெரிய வெற்றியை பெற்ற பிறகு எனக்கு நிறையப் படங்கள் வந்தன. ஆனால் நல்ல படங்களாக பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடித்தேன். போக்கிரி, தசாவதாரம் படங்களுக்கு முன்பு என்னைத் தேடி வந்த பல படங்களை நான் நிராகரித்துள்ளேன் – கதை பிடிக்காததால், என்று கூறியிருக்கிறார் அசின்.

Jilla Vijay Movie is on fire-Tamil Kisu Kisu

சூடு பிடிக்கும் விஜய் இன் ஜில்லா


பொங்கல் வெளியீடு என்று அறிவித்துவிட்ட நிலையில் சூடு பிடித்துள்ளது ஜில்லா.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா.
விஜய், மோகன் லால், காஜல் அகர்வால் என்று நட்சத்திர கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படம் தொடங்கிய நாளிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை.
சமீபத்தில்தான் இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டரே வெளியானது.
ஆனால் அதற்குள்ளாகவே ஜில்லா படத்தை வாங்கி வெளியிடுவதில் வினியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி, கோவை போன்ற ஏரியாவில் பெரும் விலைக்கு விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ஆரம்பம் படத்தின் வினியோக உரிமையை வாங்கிய அதே வினியோகஸ்தர்தான் ஜில்லா படத்தின் கோவை வெளியீட்டு உரிமையையும் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.